நடிகையிடம் தவறாக நடக்க முயற்சித்தாரா இயக்குனர் ?!!!

11th of March 2014
சென்னை::தேசிய விருது பெற்ற தென்மேற்கு பருவக்காற்று படத்தை இயக்கிய சீனு ராமசாமி தற்போது லிங்குசாமி தயாரிப்பில் இடம் பொருள் ஏவல் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் விஷ்ணு நடிக்கின்றனர். இந்த படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடிக்க வழக்கு எண் நடிகை மனிஷா யாதவ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது திடீரென மனிஷா, விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் என்று இயக்குனர் சீனு ராமசாமி கூறியதால், மனிஷா யாதவ் படத்தில் இருந்து வெளியேறிவிட்டார் என்று கூறப்படுகிறது.
 
இதுகுறித்து சீனுராமசாமி கூறும்போது, வழக்கு எண் படத்தில் சிறப்பாக நடித்திருந்ததால், மனிஷாவை விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்தது உண்மைதான். ஆனால் படப்பிடிப்பில் நான் எதிர்பார்க்கும் நடிப்பை மனிஷா தரவில்லை. எனவே நான் ஏமாற்றம் அடைந்தேன். ஆனாலும் அவரை படத்தில் இருந்து நீக்காமல் விஷ்ணுவுக்கு ஜோடியாக நடிக்கும்படி கேட்டுக்கொண்டேன். ஆனால் மனிஷா இதற்கு ஒத்துக்கொள்ளாமல் படத்தில் இருந்து விலகிவிட்டார்.தற்போது அந்தகேரக்டருக்கு வேறு நடிகையை ஒப்பந்தம் செய்ய உள்ளோம் என்று கூறினார்.
 
ஆனால் நேற்று ஒருசில இணையதளங்களில் படப்பிடிப்பின்போது மனிஷா தங்கியிருந்த ஓட்டலுக்கு இயக்குனர் தவறான நோக்கத்துடன்சென்று கதவை தட்டியதாகவும், இதனால் மனிஷா அதிர்ச்சியடைந்து இயக்குனரை கண்டபடி திட்டிவிட்டதால், அந்த கோபத்தில் இயக்குனர் மனிஷாவின் கேரக்டரை மாற்றியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து மனிஷாவிடம் கேட்டபோது பதில் கூற மறுத்துவிட்டார். ஆனாலும் நடிக்கத் தெரியாது என சொல்லி படத்திலிருந்து தன்னை நீக்கியதை ஏற்றுக் கொள்ள முடியாத மனிஷா இந்த பிரச்சனையை சும்மா விட மாட்டேன் என கூறி வருகிறாராம்.
 
சீனுராமசாமி மீது வரும் இந்த குற்றச்சாட்டு முதன்முறையல்ல. நீர்பறவை படத்தில் முதலில் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டவ்ர் பிந்துமாதவி.பின்னர் இதே குற்றச்சாட்டை கூறி பிந்துமாதவி படத்திலிருந்து விலக்கப்பட்டார்.அவருக்கு பதில் சுனைனா நாயகியாக நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது...

Comments