இந்த பிரஸ்மீட்டுக்கு வந்துதானே ஆகணும்! : சந்தானத்துக்கு வந்த ‘சொந்தப்பட’ சோதனை!!!

26th of March 2014
சென்னை::ந்தப்படமாக இருந்தாலும் அது சொந்தப்படம் என்று வரும்போது அதில் தனிக்கவனத்தை செலுத்தித்தானே ஆக வேண்டும்.
 
தமிழ்சினிமாவில் சந்தானத்தை விட்டால் காமெடி செய்ய ஆள் இல்லை. இதனால் அவர் சொல்வதைத்தான் தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் வேதவாக்காக எடுத்து வருகிறார்கள். அவர் கால்ஷீட் கொடுத்து படப்பிடிப்புக்கு மட்டும் வந்தால் போதும் என்று எழுதப்படாத சட்டம் சினிமாவில் இருக்கிறது போலும். சந்தானம் தான் காமெடி செய்யும் எந்தப் படத்தின் புரமோஷன்களுக்கும் வருவதில்லை.
 
இந்த விஷயத்தில் நயன்தாராவின் ஒன்றுவிட்ட சொக்காரர் போல சந்தானம் நடந்து கொள்வது நிருபர்கள் பல மாதங்களாகவே புகைச்சலைக் கிளப்பியிருக்கிறது. அதென்ன அவருக்கு மட்டும் தனி அந்தஸ்து என்று பல்லை ‘நறநற’த்துக் கொண்டிருக்கிறார்கள். நயன்தாரா தான் நடிக்கும் எந்த ஒரு தமிழ்ப்படத்தின் பிரஸ்மீட்டுக்கும் வருவதேயில்லை. அதேபோலத்தான் சந்தானமும் நடந்து கொள்கிறார்.
 
ஒரு அப்டத்தின் புரமோஷனுக்கு நடிகைகள் வரவில்லை என்றால் மேடை போட்டு குற்றம் சாட்டும் தயாரிப்பாளர்கள் அதே தப்பைச் செய்துவரும் சந்தானத்தைப் பற்றி மட்டும் பேசுவதேயில்லை.
ஆனால் இப்போது தனது சொந்தப்பணத்தைப் போட்டு ‘வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார் சந்தானம். பி.வி.பி சினிமா உடன் தனது சொந்த பேனரில் சந்தானம் தயாரித்து வரும் இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது.
 
விரைவில் ஆடியோ ரிலீஸ் உள்ளிட்ட புரமோஷன் வேலைகளை ஸ்டார்ட் பண்ணத் தயாராகி வருகிறார் அந்தப்படத்தின் டைரக்டர். இதுவரை எந்தப்படத்தின் பிரஸ்மீட்டுக்கும் வராமல் டிமிக்கி கொடுத்து வந்த சந்தானம் இந்தப்படத்துக்கு வந்து தானே ஆக வேண்டும் என்று வலையை விரித்து வைத்து காத்துக் கொண்டிருக்கிறார்கள் சினிமா பத்திரிகையாளர்கள்.
 
ஏற்கனவே சந்தானம் பத்திரிகையாளர்களை மதிப்பதில்லை என்கிற இமேஜ் இருந்து வரும் நிலையில், எந்த முகத்தை வைத்துக் கொண்டு அவர்களை சந்திக்கப் போகிறார் என்பதை கோடம்பாக்கமே

வேடிக்கைப் பார்க்கத் தயாராகி வருகிறது..

Comments