மீண்டும் தூசு தட்டப்படும் விக்ரமின் ராஜா வேஷம்!!!!!

30th of March 2014
சென்னை::மெமரி பிளஸ் சாப்பிடும் தேவையில்லாதவர்கள் என்றால் விக்ரமின் ராஜா வேஷம் உங்களுக்கு நினைவிருக்கும். 
செல்வராகவன் இயக்கத்தில் சில நாட்கள் விக்ரம் நடித்தது நினைவிருக்கிறதா? அந்தப் படம் கைவிடப்பட்டதும் பூபதி பாண்டியன் இயக்கத்தில் ராஜா வேஷம் என்ற படத்தில் நடிக்க முடிவு செய்தார் விக்ரம்.

ஆனால் சில காரணங்களால் அந்தப் படமும் டேக் ஆஃப் ஆகவில்லை. கடைசியில் ராஜபாட்டை என்ற அட்டை படம்தான் விக்ரமுக்கு வாய்த்தது.
 
ஐ முடிவடையும் நிலையில் விக்ரம் அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரே படத்தில் சில வருடங்களை தொலைத்ததால் வட்டியும் முதலுமாக நடிக்க விக்ரம் பரபரக்கிறார். அதற்கேற்ப தரணி, விஜய் மில்டன் ஆகியோரிடம் கதை கேட்டு நடிக்க சம்மதமும் கூறியுள்ளார். 
 
இந்நிலையில் பூபதி பாண்டியனின் ராஜா வேஷமும் தூசு தட்டப்படுகிறது. புதிய மெருகுடன் ஸ்கிரிப்ட்டை பூபதி பாண்டியன் தயார் செய்துள்ளார்.
 
இந்த மூவரில் யார் படத்தில் முதலில் விக்ரம் நடிக்கிறார்? பதில் இன்னும் மர்மமாகவே உள்ளது..

Comments