சமந்தாவின் ‘நாட்டி பாய்’ யார் தெரியுமா..?!!!

21st of  March 2014
சென்னை::.தமிழில் தற்போது சூர்யா, விஜய் என முன்னணி ஹீரோக்கள் இருவரின் படங்களிலும் சமந்தா தான் கதாநாயகி. இதைத்தவிர தெலுங்கில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ‘ஆட்டோநகர் சூர்யா’, ‘மனம்’ என இரண்டு படங்களில் நடித்து அவையும் போஸ்ட் புரொடக்‌ஷன் லெவலில் உள்ளன.
இது தவிர ஜூனியர் என்.டி.ஆருடன் ஒன்று, பெல்லம்கொண்டா சுரேஷுடன் ஒன்று என இரண்டு படங்களில் நடித்துவருகிறார் சமந்தா. மேலும் தற்போது தெலுங்கு நடிகர் ராமுடன் ‘ஆகடாயி’ என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ‘ஆகடாயி’ என்றால் ‘நாட்டி பாய்’ என்று அர்த்தமாம்.
இந்தப்படத்தை மல்லிடி வேணு என்பவர் இயக்குகிறார்.. இவர் ஒன்றிரண்டு படங்களில் நடிகராகவும் நடித்தவர்தான். அனேகமாக இந்தப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கும் என தெரிகிறது.

Comments