புதுயுகம் தொலைக்காட்சி வழங்கும் புத்தம் புதிய மங்களகரமான ரியாலிட்டி நிகழ்ச்சி: மேளம் கொட்டு தாலி கட்டு!!!
10th of March 2014
சென்னை::.தமிழ்த்தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக புதுயுகம் தொலைக்காட்சி வழங்கும் புத்தம் புதிய மங்களகரமான ரியாலிட்டி நிகழ்ச்சி மேளம் கொட்டு தாலி கட்டு (சீசன் – 2)
சென்னை::.தமிழ்த்தொலைக்காட்சி வரலாற்றில் முதன்முறையாக புதுயுகம் தொலைக்காட்சி வழங்கும் புத்தம் புதிய மங்களகரமான ரியாலிட்டி நிகழ்ச்சி மேளம் கொட்டு தாலி கட்டு (சீசன் – 2)
பிரபல நடிகை சினேகா தொகுத்து வழங்கும் இந்த புதுமையான நிகழ்ச்சியில் நிச்சயதார்த்தம் முடிந்து திருமணத்திற்கு காத்திருக்கும் மூன்று இளம் பெண்கள்,தங்கள் ஜோடியுடன் கலந்துகொள்ளலாம்.போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே தங்கம் மற்றும் பல்வேறு பரிசு பொருட்களை புதுயுகம் தொலைக்காட்சி வழங்குகிறது.
முதல் சீசன் வெற்றியை தொடர்ந்து வித்தியாசமான சுற்றுகளுடன் விறுவிறுப்பான போட்டியாளர்களுடனும் இரண்டாவது சீசன் (சீசன் – 2) வரும் மார்ச் 8 ஆம் தேதி முதல் சனிக்கிழமைதோறும் இரவு 8.00 மணி முதல் 9.00 மணி வரை புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கிறது.ஆறு சுற்றுகளில் இரண்டு லட்சம் வரை போட்டியளர்கள் வெல்லலாம். சுற்றுகள் அனைத்தும் திருமணம் ஆக போகும் ஜோடிகள் ,தங்கள் தின வாழ்கையில் சந்திக்கும் நிகழ்வுகளை அடிப்படையாக கொண்ட கேள்விகள் மற்றும் இருவருக்குள் இருக்கும் புரிந்து கொள்ளுதல் மற்றும் ஒருங்கிணைந்த செயல்பாட்டினை வெளிப்படுத்தும் விதமாக வடிவமைக்கப்படுள்ளது .
பங்கு பெரும் ஜோடிகள் தங்கள் திருமண வாழ்க்கை பயணத்தை மேளம் கொட்டு தாலி கட்டு (சீசன் – 2) நிகழ்ச்சி மூலம் இனிமையாக தொடங்க புதுயுகம் தொலைக்காட்சி வழி வகுக்கிறது...
Comments
Post a Comment