7th of March 2014..
சென்னை::மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிப்பதற்கு மன்னிக்கவும். ஆனால் தேவை இருக்கிறதே.. மலையாளத்தில் மோகன்லால் நடித்து சூப்பர்ஹிட்டான ‘த்ரிஷ்யம்’ படத்தின் தமிழ் ரீமேக்கில் கமல் நடிக்கிறார் என்பது மட்டும் தான் தற்போதுவரை உறுதியாகி இருக்கும் தகவல்.
வருக்கு ஜோடியாக மீனா நடிக்கிறார்.. இல்லையில்லை நதியாதான் நடிக்க இருக்கிறார் என செய்திகள் அவ்வப்போது வெளியாகின. லேட்டஸ்டாக சிம்ரன் தான் கமலுக்கு ஜோடியாக நடிக்கிறார் என ஒரு தகவலும் வெளியானது. ஆனால் சிம்ரனே தற்போது விளக்கம் அளித்து அந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
த்ரிஷ்யம்’ படத்தின் எந்த மொழி ரீமேக்கிலும் நான் நடிக்கவில்லை. எனது படங்கள் குறித்து செய்திகள் இருந்தால் நானே நேரடியாக மீடியாவில் அறிவித்துவிடுவேன். ஆகவே வதந்திகளை நம்பாதீர்கள்” என்று அறிக்கை மூலமாக விளக்கம் அளித்துள்ளார்.
என்னது..? அப்போ கமலுக்கு ஜோடி யாருங்களா..? ஏங்க இப்பதான் கமல் நடிக்க ஆரம்பிச்சிருக்கிற ‘உத்தம வில்லன்’ படத்திலேயே அவருக்கு ஜோடி யாருன்னு இன்னும் தெரியல..? முதல்ல அது யாருன்னு பார்ப்போம்.. அதனால் ‘த்ரிஷயம்’ ரீமேக் விஷயத்தை நாமளும் கொஞ்சம் ஆறப்போடுவோம்.
Comments
Post a Comment