இந்தி நடிகர் வருன் தவான் இலியானா காதல்!!!


 2nd of March 2014
சென்னை::இந்தி நடிகர் வருன் தவானை இலியானா காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் ‘மெயின் தேரா ஹீரோ’ என்ற படத்தில் ஜோடியாக நடிக்கிறார்கள். இலியான தமிழில் ‘கேடி’, ‘நண்பன்’ படங்களில் நடித்துள்ளார். தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார்.

தற்போது இரண்டு இந்திப்படங்களில் நடித்து வருகிறார். ‘மெயின் தேரா ஹீரோ’ பட நாயகன் வருன் தவான் இலியானாவை மிகவும் கவர்ந்துள்ளாராம். அவரை காதலிப்பதாக மறைமுகமாக தெரிவித்து உள்ளார்.

இது குறித்து இலியானா கூறும் போது, வருன் தவான் பழக இனிமையானவர். புத்திசாலி. எனக்கு கணவராக வருகிறவர் வருன் தவான் போன்ற குணங்கள் உள்ளவராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன் என்றார். இது இந்தி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Comments