22nd of March 2014
சென்னை::டென்ஷனே ஆகவேண்டாம் இது தெலுங்கு சினிமா பற்றிய செய்திதான். கடந்த வாரம் தான் ராஜா ராணி தெலுங்கிலும் வெளியாகி அங்குள்ள ரசிகர்களை ஒரு உலுக்கு உலுக்கியிருக்கிறது. அதற்கேற்ற மாதிரி வசூலும் பிரமாதம் என அங்கிருந்து ரிப்போர்ட்டுகள் வந்துகொண்டிருக்கின்றன.
அதைத்தொடர்ந்து இடைவெளி விடாமல் தெலுங்கு ரசிகர்களை அதே பிரமிப்பிலேயே வைத்திருக்க வேண்டும் என முடிவு செய்துவிட்டார்களோ என நினைக்க தூண்டும் வகையில் இந்தவாரம் அஜீத் நடித்த வீரம் தெலுங்கில் ‘வீருடொக்கடே’ என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது.
வீரம்’ இங்கே தமிழில் வெளியாகி வெற்றிபெற்றபோதே அதன் தெலுங்கு ரீமேக் உரிமையை நாகார்ஜூனாவோ அல்லது வெங்கடேஷோ கைப்பற்றுவார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால் பல காரணங்களை கூட்டிக்கழித்து பார்த்த விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் வீரத்தின் டப்பிங் வேலைகளில் இறங்கி இதோ இந்தவாரம் தெலுங்கில் ரிலீஸ் செய்தும் விட்டது.
தமிழைப் போலவே தெலுங்கிலும் இந்தப்படத்தின் முதல் நாள் வசூல் தயாரிப்பாளரின் எதிர்பார்ப்பை பூர்த்திசெய்யும் விதமாகவே இருக்கிறதாம். இதுதவிர விக்ரம் பிரபு நடித்த ‘இவன் வேற மாதிரி’ படமும் ‘சிட்டிசன்’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது.. கூடவே சமீபத்தில் வெளியான ‘தெகிடி’யும் ‘பத்ரம்’ என்ற பெயரில் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது.
Comments
Post a Comment