31st of March 2014சென்னை::நடிகர் உதயாவின் மனைவியும் ராரா படத்தின் தயாரிப்பாளருமான கீர்த்திகா உதயா
பின்னணிப் பாடகியாகவும் டப்பிங் கலைஞராகவும் பல படங்களில் பணியாற்றி
வருகிறார். விஜய் இயக்கத்தில் வெளிவந்த தாண்டவம் படத்தில் லட்சுமி
ராய்க்கும், ராம்கோபால் வர்மா இயக்கிய நான்தாண்டா படத்தில் அனைகாவிற்கும்
பின்னணி குரல் கொடுத்தார்.
இப்போது ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்
படத்தில் நாயகி அஷ்ரிதாவிற்கும் யாமிருக்க பய ம படத்தில் ரூபாமஞ்சரிக்கும்
பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். ரா ரா, நான்தாண்டா படங்களில்
பாடல்களையும் பாடியிருக்கிறார் கீர்த்திகா உதயா. இவரது மாமனார் ஏஎல்
அழகப்பன் தயாரிப்பாளர், கணவர் உதயா நடிகர், மைத்துனர் விஜய் இயக்குநர் என்ற
திரைக்குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார் இந்த புதிய குயில்
கீர்த்திகா உதயா...
Comments
Post a Comment