நடிப்பவர்களே பாடவேண்டுமாம் – ஃபஹத் பாசிலின் புதிய பட ஆச்சர்யம்!!!

7th of March 2014..
சென்னை::மலையாள திரைப்பட உலகின் இளம் முன்னணி நாயகனான ஃபஹத் பாசில் அடுத்து நடிக்க இருக்கும் படம் திகில், மர்மம் கலந்த கதையாக பின்னப்பட்டுள்ளது. இந்தப்படத்தை இயக்குபவர் புதிய பெண் இயக்குனரான ரம்யா ராஜ். காடுகளின் பின்னணியில் உருவாகும் இந்தப்படத்துக்கு ‘வேம்பதி’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இதில் ‘மாடன்’ என்கிற மர்மம் கலந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஃபஹத் ஃபாஸில். கதாநாயகி நைலா உஷா டாக்டராக நடிக்கிறார். ஒரு உண்மைச்சம்பவத்தின் அடிப்படையில் லவ் ஸ்டோரியாக உருவாகி வரும் இந்தப்படத்தில் ஒரு புதிய முயற்சியாக படத்தில் நடிக்கும் நடிகர்களே பாடல்களை பாட இருக்கிறார்களாம்.
 
 படத்தில் உண்மையான ஃபீலை கொடுக்கவேண்டும் என விரும்பிய இயக்குனர் ரம்யா ராஜ் இயற்கையோடு இணைந்த இசையும் அதனுடன் சம்பந்தப்பட்ட கதாபாத்திரங்களில் நடிப்பவர்களே::
பாடுவதும் ரசிகர்களை இன்னும் படத்துடன் நெருக்கமாக்கும் என்கிறாராம்.

Comments