மணிரத்னம் படத்திலிருந்து விலகினார் மகேஷ்பாபு!!!!

28th of March 2014
சென்னை::நாகார்ஜூனா தெலுங்கில் மட்டுமே நடித்துவந்தாலும் தமிழ் ரசிகர்களின் மனதில் காலூன்ற களம் அமைத்து கொடுத்தது மணிரத்னம் இயக்கிய ‘இதயத்தை திருடாதே’ படம் தான். ‘கீதாஞ்சலி’ என்று தெலுங்கில் உருவானாலும் கூட தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டபோது பெரும் வரவேற்பை பெற்றது.
அதேபோன்றதொரு வாய்ப்பு மணிரத்னம் மூலமாக டோலிவுட் இளவரசன் மகேஷ்பாபுவையும் தேடிவந்தது.. ஒருமுறையல்ல.. இருமுறை.. முதலில் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை இயக்கப்போவதாகவும் அதில் மகேஷ்பாபு ஹீரோவாக நடிக்க இருக்கிறார் என்றும் ஒரு பரபரப்பு கிளம்பி சில நாட்களில் அப்படியே அமுங்கிப்போனது.
இப்போதோ மீண்டும் மணிரத்னம் மூலமாக தமிழில் நுழைய தன்னைத்தேடி வந்த வாய்ப்பை மகேஷ்பாபுவே கைநழுவவிட்டுள்ளதோடு ரசிகர்களுக்கு ஏமாற்றத்தையும் தந்துள்ளார். அதனால் இந்தப்படத்தில் ஹீரோவாக நடிக்க நாகார்ஜூனாவை ஒப்பந்தம் செய்துள்ளார் மணிரத்னம்.. 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இருவரும் இணைகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments