விஜய்சேதுபதி ஜோடியாக மீண்டும் ‘குமுதா’!!!


14th of March 2014சென்னை::தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை ஆகிய படங்களை இயக்கியுள்ள சீனுராமசாமி. தற்போது தனது மூன்றாவது படமாக ‘இடம் பொருள் ஏவல்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தப்படத்தில் அவரது முந்தைய படங்களின் கதாநாயகர்களான விஜய் சேதுபதி மற்றும் விஷ்ணு இருவரும் நடிக்கின்றனர் (இது பாலா-விக்ரம்-சூர்யா கூட்டணி ஸ்டைல்).
 
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்த ‘அட்டகத்தி’ நந்திதா இந்தப்படத்தில் மீண்டும் அவருடன் நடிக்கிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைக்கும் இந்தப்படத்தை, லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. .  

Comments