12th of March 2014
சென்னை::இயக்குனருடன் நடிகை மதுரீமா மோதலால் பரபரப்பு ஏற்பட்டது.தமிழில் ‘இபிகோ‘ படத்தில் நடித்ததுடன் தற்போது ‘சேர்ந்து போலாமா“ என்ற படத்தில் வினய் ஜோடியாக நடிக்கிறார் மதுரீமா. அனில்குமார் டைரக்ஷன். இப்படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நியூசிலாந்தில் நடந்தது. ஷூட்டிங்கிற்கு மதுரீமா ஒத்துழைப்பு கொடுக்காததால் வீண் செலவுகள் ஏற்பட்டது என்றார் அனில்குமார். இதுபற்றி அவர் கூறியதாவது:

நியூசிலாந்தில் 50 நாள் ஷூட்டிங் நடத்தினோம். எங்களுடன் மதுரீமா வந்திருந்தார். அவருக்கு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக குடியிருப்பு ஒன்றில் தங்க வைத்தோம். ஆனால் ஷூட்டிங்கிற்கு குறித்த நேரத்தில் அவர் வரவில்லை. வெளிநாட்டில் ஷூட்டிங் நடத்தும்போது அங்குள்ள கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். அதை மதுரீமா புரிந்துகொள்ளாமல் நடந்துகொண்டார். மற்றொரு நாள் வெளிநாட்டு கேமராவை வாடகைக்கு எடுத்து வெளிநாட்டு டெக்னீஷியனை வைத்து ஷூட்டிங் நடத்தியபோது ஷூட்டிங்கிற்கே மது வரவில்லை. கேட்டால் ஓய்வு தேவை என்றார். அவரது செயல் யூனிட்டாரை எரிச்சலடையச் செய்தது. நல்ல நடிகைதான், அதற்காக ஒத்துழைப்பு கொடுக்காவிட்டால் எப்படி? என்றார்.
இது பற்றி மதுரீமா கூறும்போது, ‘திட்டமிட்டபடி ஷூட்டிங் நடத்தாமல் இஷ்டம்போல் நடத்தினார்கள். ஷூட்டிங்கின்போது எனக்கு உதவியாளர் யாரும் தரப்படவில்லை. 10 சதவீத சம்பளம்கூட அட்வான்ஸாக தரவில்லை. என்னுடைய மேனேஜர் தயாரிப்பு நிர்வாகியாக இருந்தும் அவரும் உதவவில்லை. அவர்கள் என்னை ஓரம்கட்டுவதிலேயே குறியாக இருந்தார்கள். 90 சதவீதம் படம் முடிந்த நிலையில் எனது சம்பளத்தை கேட்டதற்கு என்னை கிரிமினல்போல் பார்க்கிறார்கள்Õ என்றார்..
Comments
Post a Comment