31st of March 2014
சென்னை::படத்தில் குத்து பாடலுக்கு டான்ஸ் ஆடுகிறார் தமன்னா.தமிழில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த தமன்னா, கடந்த 2 வருடத்துக்கு முன் திடீரென்று தமிழ் படங்களை ஒதுக்கிவிட்டு டோலிவுட் படங்களில் மட்டுமே நடித்து வந்தார். பல படங்களில் அவருக்கு தமிழில் நடிக்க வாய்ப்பு வந்தும் ஏற்காமல் ஒதுக்கி வந்தார். கோலிவுட் ஹீரோ ஒருவருடன் ஏற்பட்ட மோதலால்தான் அவர் தமிழ்படங்கள் ஏற்காமல் இருந்ததாக கூறப்பட்டது.
இந்தநிலையில் கடந்த ஆண்டு ‘வீரம்‘ படத்தில் அஜீத் ஜோடியாக நடிக்க வந்த வாய்ப்பை மட்டும் ஏற்று நடித்தார். தற்போது ராஜமவுலி தமிழ் தெலுங்கில் இயக்கி வரும் ‘பாஹுபலி‘ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அனுஷ்கா ஹீரோயினாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர ‘ஆகடு என்ற படத்திலும் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் நான்கைந்து படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த தமன்னாவுக்கு வாய்ப்புகள் மங்க ஆரம்பித்ததையடுத்து பாலிவுட் படங்களில் கவனம் செலுத்தினார். அங்கும் பெரிதாக சாதிக்க முடியாததால் சோர்வடைந்தார். இந்நிலையில்
தெலுங்கில் வி.வி.விநாயக் இயக்கும் புதிய படத்தில் குத்து பாடலுக்கு நடனம் ஆட வாய்ப்பு வந்தது. இப்படத்தில் சமந்தா ஹீரோயினாக நடிப்பதால் முதலில் குத்து பாடலுக்கு ஒப்புக்கொள்ள தயங்கினார். ஆனால் இயக்குனர் விநாயக் வெற்றி இயக்குனர் என்பதாலும், படத்தை தயாரிப்பது பெரிய தயாரிப்பாளர் என்பதாலும் இந்த வாய்ப்பை தட்டிக் கழிக்க முடியவில்லையாம். இவரது குத்துபாடல் ஏப்ரல் மாதம் இறுதியில் அல்லது மே மாதம் தொடக்கத்தில் படமாக்கப்பட உள்ளது....
Comments
Post a Comment