விஷால் படம் ரிலீஸ் எப்போது..?!!!

 7th of March 2014..
சென்னை::விஷால் நடித்துள்ள ‘நான் சிகப்பு மனிதன்’ படத்தின் ஆடியோ ரிலீஸை வரும் 13ஆம் தேதி நடத்த இருக்கிறார்கள். ‘பாண்டியநாடு’ படத்தின் மூலம் விஷாலின் ராசியான ஜோடியான லட்சுமி மேனன் தான் இந்தப்படத்திலும் கதாநாயகி. இனியா இரண்டாவது கதாநாயகியாக நடிக்கிறார். விஷாலின் ஆஸ்தான இயக்குனரான ‘திரு’ இயக்கும் இந்தப்படத்திற்கு ஜீ.வி.பிரகாஷ் இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்களை எழுதுகிறார்.
 
படத்தை தமிழ்ப்பத்தாண்டு ரிலீஸாக ஏப்ரல் 11ஆம் தேதியே வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறார்கள்.. இந்தப்படத்தின் இடைவேளை வரையிலான காட்சிகள் படத்தொகுப்பு செய்யப்பட்டு பின்னணி இசைக்கோர்ப்புக்காக ஜீ.வி.பிரகாஷிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பாதி படத்தொகுப்பு நடைபெற்று வருகிறது.
 
விஷால் பிலிம் பேக்டரியுடன் யுடிவியும் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறது. “படம் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை தரும். அந்தளவுக்கு பிரமிப்பாக வந்துள்ளது. இயக்குனர் திரு முற்றிலும் வித்தியாசமான பாணியில் கதையை சொல்லியிருக்கிறார்” என்கிறார் யுடிவி நிர்வாகியான தனஞ்செயன்.

Comments