ஷூட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே பிரச்னைகளால் நின்று போன பிரபல நடிகர்களின் படங்கள்!!!!!

25th of March 2014
சென்னை::தமிழில் பிரபலமாக இருக்கும் சில நடிகர்களின் பட ஷூட்டிங் சில நாட்கள் நடக்கும். பிறகு பல காரணங்களால் நின்றுவிடும். ஓரிரு படங்களின் ஷூட்டிங், இறுதிக்கட்டத்தை நெருங்குவதற்கு முன்பே கைவிடப்படும். அப்படி நாம் கேள்விப்பட்ட சில படங்களின் தொகுப்பு இங்கே.
ரஜினியின் ராணா, கமல்ஹாசனின் மருதநாயகம், மர்மயோகி, கார்த்திக் நடித்த மனதில், அத்தை மகன், லிவிங்ஸ்டன் நடித்த லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன், பிரபு நடித்த ஆயிரம் பொய் சொல்லி, சத்யராஜ் நடித்த திருநாள், பேட்டை முதல் கோட்டை வரை, குலசேகரனும் கூலிப்படையும், உதயா நடித்த டில்லி, பூங்குயிலே, காதல் சாதி போன்ற படங்களில் ஓரிரு படங்களின் ஷூட்டிங் முழுமையாக முடிந்து விட்டது.
 
ஆதி, ராஜ்கிரண் நடித்த சரித்திரம், சிம்பு நடித்த கெட்டவன், தனுஷ் நடித்த டாக்டர்ஸ், விக்ரம் நடித்த சிந்துபாத், கரிகாலன், சூர்யா நடித்த சென்னையில் ஒரு மழைக்காலம், பிரபுதேவா நடித்த களவாடிய பொழுதுகள், மயூர் நடித்த சத்தமின்றி முத்தமிடு, பலே, சரத்குமார் நடித்த புகழ், விடியல், பிரசாந்த் நடித்த விண்ணோடும் முகிலோடும், என்ன விலை அழகே, பிரகாஷ்ராஜ் நடித்த பிறந்த நாள், நெப்போலியன் நடித்த பரணி, விவேக் ஹீரோவாக நடித்த சொல்லி அடிப்பேன், ஜெய் நடித்த அர்ஜுனன் காதலி, வெங்கட் பிரபு மற்றும் சங்கீதா அறிமுகமான பூஞ்சோலை, விஜய் சேதுபதி நடித்த சங்குதேவன், ரம்பா நடித்த விடியும் வரை காத்திரு போன்ற படங்களில், ஓரிரு படங்களின் ஷூட்டிங் தொடங்கிய சில நாட்களிலேயே பிரச்னை ஏற்பட்டு நிறுத்தப்பட்டன.
 
சில படங்கள் ரிலீசுக்கு தயாரான நிலையில், தவிர்க்க முடியாத பிரச்னை காரணமாக முடக்கப்பட்டுள்ளன. விஷால் நடித்த மதகஜராஜா படத்துக்கு பல தடைகள் ஏற்பட்டுள்ளன. ரிலீஸ் செய்ய ஏற்பாடுகள் நடக்கிறது.::.

Comments