30th of March 2014
சென்னை::ஏப்ரலில் முக்கியமான பல படங்கள் வெளியாகின்றன. அதில் மூன்று படங்கள் வெளியாவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மான் கராத்தே, நான் சிகப்பு மனிதன், வடிவேலுவின் தெனாலிராமன்.
மான் கராத்தே ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகிறது. நான் சிகப்பு மனிதன் 11 ஆம் தேதி. அதேநாளில் தெனாலிராமனை வெளியிட ஏஜிஎஸ் முடிவு செய்திருந்தது. இரண்டு முக்கியமான படங்கள் ஒரே நாளில் வெளியானால் ஓபனிங் கலெக்ஷன் இரு படங்களுக்குமே பாதிக்கப்படும். அதனால் தெனாலிராமனை ஏப்ரல் 18 ஆம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர். இந்த தேதி மாற்றத்தை நான் சிகப்பு மனிதனை விஷnலுடன் இணைந்து தயாரிக்கும் யுடிவி யின் தமிழக பொறுப்பாளர் தனஞ்செயன் வரவேற்றுள்ளார்.

இந்த வருடம் இதுவரை வெளியான படங்களில் கோலிசோடா மட்டுமே லாபம்
என்கிறார்கள். இந்த தோல்வி கணக்கை மான் கராத்தே, நான் சிகப்பு மனிதன்,
தெனாலிராமன் மூன்றும் மாற்றும் என்பது அனைவரின் நம்பிக்கை. அதற்கேற்ப ஒரே
நாளில் போட்டியிடாமல் ஒருவார இடைவெளில் மூன்று படங்களும் வெளியாகின்றன.
Comments
Post a Comment