19th of March 2014
சென்னை::தாமரை மூவீஸ் வழங்க சௌத் இண்டியன் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம்
தயாரிக்கும் படம் 'காந்தர்வன்'. இந்த படத்தில் கதிர் கதாநாயகனாக
நடிக்கிறார். கதாநாயகியாக ஹனிரோஸ் நடிக்கிறார். மற்றும் கஞ்சாகருப்பு,
காதல்தண்டபாணி, நெல்லைசிவா,சபாபதி,ஆண்டமுத்து, வெள்ளைசுப்பையா,
செல்லத்துரை,கிரேன் மனோகர், கோவைசெந்தில்குமார், ரிஷா ஆகியோர்
நடிக்கிறார்கள்.
ஒளிப்பதிவு -அனில் கே.சேகர், இசை - அலெக்ஸ்பால், எடிட்டிங்-எஸ்.எம்.வி.சுப்பு, பாடல்கள்-கவிஞர் வாலி, விவேகா, முத்துவிஜயன், கவின்சம்பத், கலை-எம்.ஏ.ராமதுரை, நடனம்-தினா, ஸ்டன்ட்-தீப்பொறி நித்யா
தயாரிப்பு நிர்வாகம்-நாகராஜன்
கதை,திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் சலங்கைதுரை . இவர் கரண் – வடிவேலு நடித்த காத்தவராயன் வெற்றிப் படத்தை இயக்கியவர்.
படம் பற்றி கூறிய இயக்குநர், "இந்த படத்திற்காக சமீபத்தில் கதிர் -ஹனிரோஸ் பங்கேற்ற "நெருப்பாய் நெருப்பாய் தெரியுது நிழலே" என்ற பாடல் காட்சி சென்னையில் படமாக்கப் பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் துவங்கி பாண்டிச்சேரி வரை நடைபெற்றது.
காதல் கதையை சுவாரஸ்யமாக சொல்லி இருக்கிறோம். கஞ்சாகருப்பு இந்த படத்தில் படு கஞ்சனாக நடித்திருக்கிறார். இந்தப் பட ரிலீஸுக்கு பிறகு கஞ்சா கருப்புவை கஞ்ச கருப்பு என்று அழைப்பார்கள் அந்த அளவிற்கு படத்தில் அவரது கதாப்பாத்திரம் அமைந்திருக்கிறது. அதே மாதிரி கதிர் நிச்சயம் பெரிய அளவிற்கு வரக்கூடிய நடிகராக காந்தர்வர் மூலம் மாறுவார்." என்றார்.

Comments
Post a Comment