25th of March 2014
சென்னை::இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக விஜய் – ஏ.ஆர் முருகதாஸ் படத்தை சொல்லலாம். ஏற்கனவே துப்பாக்கி என்ற பிளாக்பஸ்டர் கொடுத்த பிறகு இந்த கூட்டணியை எதிர்பார்க்க மாட்டாங்களா என்ன..
சென்னை::இந்த வருடத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக விஜய் – ஏ.ஆர் முருகதாஸ் படத்தை சொல்லலாம். ஏற்கனவே துப்பாக்கி என்ற பிளாக்பஸ்டர் கொடுத்த பிறகு இந்த கூட்டணியை எதிர்பார்க்க மாட்டாங்களா என்ன..
இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் அசத்த இருக்கிறாராம். விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கும் இப்படத்தில் வில்லனாக பெங்காலி நடிகர் தோட்டா ராய் செளத்ரி நடித்து வருகிறார். படத்தில் அவர் வெளிநாட்டு தாதாவாக வருகிறாராம். அனிருத் இசையமைக்க, ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்து வருகிறார். பாடல்களை மதன் கார்க்கி எழுதுகிறார்.
இரண்டு பிரபலங்களுடன் இணைந்து முதன் முறையாக கைகோர்த்திருப்பதால் அனிருத் இப்படத்திற்கென தனி கவனம் செலுத்தி இசையமைத்து வருகிறாராம். சமீபத்தில் கூட மதன் கார்க்கி எழுதிய தத்துவ குத்துப் பாடல் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்தப் பாடல் சூப்பராக அமைந்துள்ளதாக மதன் கார்க்கியே தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
சாதாரணமாகவே விஜய் படத்தில் இடம்பெறும் பாடல்களுக்கு ஒரு மாஸ் இருக்கும். இதில் அனிருத்தின் துடிப்பான இசையும் சேர்ந்து ரசிகர்களை கிரங்கடிக்கப்போவது உறுதி என திரையுலகத்தில் பேசப்பட்டு வருகிறது. படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை.
Comments
Post a Comment