23rd of March 2014
சென்னை::சந்தானம் சேது, பவர்ஸ்டாருடன் இணைந்து விசாகா சிங்கிற்கு காதல் அம்பு விட்ட கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் இருந்து தனது ரொமான்ஸ் நடிப்பை தொடங்கியவர் சந்தானம். ஆனால், அப்படத்தில் சேது கதாநாயகன் என்பதால், விசாகா சிங்கை கட்டிப்பிடித்து டூயட் பாடும் பாக்கியம் சந்தானத்துக்கு சரிவர அமையாமல் போனது.
ஆனால்,. இப்போது அவர் நடித்துள்ள வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் அந்த ஆசையை நிறைவேற்றியுள்ளார் சந்தானம். 2010ல் தெலுங்கில் ராஜமவுலி இயக்கத்தில் வெளியான மரியாதை ராமண்ணா படத்தின் ரீமேக்கான இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அஷ்னா சாவேரி நடிக்கிறார். இப்படத்துக்காக மற்ற ஹீரோக்கள் போன்று தனது உடல்கட்டையும் ஸ்லிம் பண்ணி யூத் கெட்டப்புக்கு தன்னை மாற்றியுள்ள சந்தானம்,
ஜீன்ஸ், டீசர்ட், கூலிங் கிளாஸ் என்று செம கலக்கு கலக்கியிருப்பவர், பாடல் காட்சிகளில் புதுமுக நடிகையை ரவுண்டு கட்டியுள்ளாராம். குறிப்பாக, ரொமான்ஸ் காட்சிகளில் ஓவராக காது கடித்திருப்பவர், பாடல் காட்சிகளில் அவரது இடுப்பை வளைத்து நொடித்து ஒரு வழி பண்ணிவிட்டாராம். ஆக, காமெடி, காதல், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று ஆர்ப்பாட்டமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளாராம் சந்தானம்!!.
Comments
Post a Comment