19th of March 2014
சென்னை::மலையாள சினிமாக்களில் தவிர்க்க முடியாத ஒரு நடிகைதான் லேனா.. அக்காவாக, அண்ணியாக, இரண்டாவது கதாநயகர்களின் மனைவியாக ஏதாவது ஒருவகையில் இவரது பங்களிப்பு மலையாள சினிமாக்களில் இருந்துகொண்டே இருக்கும்..
தமிழில் ரீமேக்கான ‘சென்னையில் ஒரு நாள்’ படத்தில் பிரகாஷ்ராஜின் மனைவியாக ராதிகா ஏற்றிருந்த கேரக்டரை தன் ஒரிஜினலான மலையாள படமான ‘ட்ராஃபிக்’கில், ரகுமானின் மனைவியாக ஏற்று நடித்தவர் இவர்தான். மலையாளத்தில் இருந்து இங்கே ஹீரோயின்கள் தான் வருவது வழக்கம்.. ஆனால் இப்போது இவரும் தமிழில் கே.வி.ஆனந்த் இயக்கும் ‘அனேகன்’ படம் மூலமாக தன் காலடியை எடுத்து வைத்திருக்கிறார்.
என்ன கதாபாத்திரம் என்றால் மூச்சுவிட மறுக்கும் இவர் கே.வி.ஆனந்த் குழுவினரின் திட்டமிடுதலையும் வேகத்தையும், தனுஷின் நடிப்பையும் எளிமையையும் பக்கம் பக்கமாக புகழ்ந்து தள்ளுகிறார். எப்படியோ தமிழுக்கு நடிக்க தெரிந்த இன்னொரு குணச்சித்திர நடிகை ரெடி.
Comments
Post a Comment