29th of March 2014
சென்னை::ஏப்ரல்-4 ஆம் தேதி இரண்டு முக்கியமான படங்கள் வெளியாக இருக்கின்றன. ஒன்று சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘மான் கராத்தே’.. இன்னொன்று அருள்நிதி நடித்துள்ள ‘ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும்’.. அருள்நிதி ஜோடியாக பிந்துமாதவி மற்றும் அஷ்ரிதா ஷெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப்படத்தை சிம்பு தேவன் இயக்கியுள்ளதால் இன்னும் கூடுதல் கவனம் பெற்றிருக்கிறது.
அதேபோல ‘மான் கராத்தே’ படத்தில் ஹன்சிகா நடித்துள்ளது, ஏ.ஆர்.முருகதாஸின் உதவியாளரான திருக்குமரன் இயக்கம், அனிருத்தின் இசை என பில்டிங், பேஸ்மட்டம் எல்லாமே பலமாகவே உள்ளன. வினியோகஸ்தர்களின் கணிப்புப்படி இரண்டு படங்களுமே நல்ல வசூலை குவிக்கும் என்று சொல்லப்படுகிறது.
Comments
Post a Comment