பழனி கோவிலில் தங்கரதம் இழுத்து நடிகை லட்சுமிமேனன் வழிபாடு!!!

18th of March 2014
சென்னை::பழனியில் உள்ள மாரியம்மன் மாசித் திருவிழாவை முன்னிட்டு வருத்தமில்லா வாலிபர் சங்கம் சார்பில் பூச்சொரில் விழா நடந்து வருகிறது. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் நேற்று (மார்ச் 16) நடந்தது. இதில் திரைப்பட இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரைப்பட நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் நடிகை லட்சுமி மேனன். பின்னர் அவர் பழனி முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். தங்க தேர் இழுத்தார்.

சாமி தரிசனம் முடிந்து வெளியில் வந்த லட்சுமி மேனன் நிருபர்களிடம் கூறியதாவது: கும்கி படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது பழனி முருகன் கோவிலுக்கு வந்தேன். நான் நடிக்கும் படங்கள் எல்லாம் நல்லபடியாக ஓட வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன். எனக்கு முருகன் அருள் இருக்கிறது. அதனால் இதுவரை நான் நடித்த அத்தனை படங்களும் வெற்றி பெற்றுள்ளது. அதற்கு முருகனுக்கு நன்றி தெரிவிக்கவே வந்தேன். தற்போது நடித்து வரும் நான் சிகப்பு மனிதன், ஜிகிர் தண்டா, மஞ்சப்பை, சிப்பாய் படங்களும் வெற்றி பெற வேண்டும் என்று முருகனிடம் வேண்டியிருக்கிறேன். அடுத்த ஆண்டு பிளஸ்-2 படிக்க இருக்கிறேன். படிப்பு, நடிப்பு இரண்டிலும் இப்போது கவனம் செலுத்தி வருகிறேன். இதை தாண்டி வேறு எதிலும் கவனம் இல்லை என்றார்.

Comments