ட்விட்டர் கலாட்டாவில் சிக்கிய யாமி கௌதம்!!!

31st of March 2014
சென்னை::ராதாமோகன் இயக்கிய ‘கௌரவம்’ படத்தில் அறிமுகமான யாமி கௌதமை உங்களுக்கு தெரியும் தானே..? படம் பார்க்காதவர்களுக்கு, ஃபேர் & லவ்லி க்ரீம் விளம்பரத்தில் வரும் அழகுப்பெண் தான் யாமி என்று சொன்னால் அடடே அவரா.. நல்லா தெரியுமே என்பார்கள்.. அந்த யாமியைத்தான் இப்போது ட்விட்டரில் போட்டு கலாய் கலாய் என கலாய்க்கிறார்கள்.. ஓட்டு ஓட்டு என்று ஓட்டுகிறார்கள்..
 
சாம்பிளுக்கு ஒன்றிரண்டை பார்ப்போமா..? “இந்தியாவில் உள்ள கறுப்பு பணத்தையெல்லாம் வெள்ளையாக்க யாமியால் தான் முடியும்”.. சரி.. இன்னொருத்தர் கமெண்ட்டை பார்ப்போமா..? “யாமியின் கலரின் முன்னால் பாலின் நிறம் கூட சற்று கறுப்பாகத்தான் தெரியும்..”
 
இப்படி ஒன்றல்ல.. ரெண்டல்ல.. ஆயிரக்கணக்கில் இப்படி ட்விட்டரில் கமெண்ட்டுகளும் ஜோக்குகளும் யாமியை குறிவைத்து உலாவர இப்போது ட்விட்டரின் ஹாட் டாபிக் ஆகிவிட்டார் யாமி கௌதம். எப்படியெல்லாம் இலவசமா விளம்பரம் கிடைக்குது பாருங்க…

Comments