கே.பாலச்சந்தருடன் இணையும் பரத்!!!!

26th of March 2014
சென்னை::பாலச்சந்தரின் கவிதாலயா புரொடக்‌ஷன்ஸ் 2008-ஆம் ஆண்டு திருவண்ணாமலை திரைப்படத்தை தயாரித்தனர். அதன்பிறகு எந்த படங்களும் தயாரிக்காமல் இருந்த கவிதாலயா புரொடக்‌ஷன்ஸ், தற்போது அறிமுக இயக்குனர் LG.ரவிச்சந்தர் இயக்கும் ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி என்கிற திரைப்படத்தை தயாரிக்கிறது.
 
நந்திதா ஹீரோயினாக நடிக்கும் இத்திரைப்படத்தில் நடிகர் பரத் ஹீரோவாக நடிக்கிறார். ஒரு படிக்காத கணவனுக்கும், அதிகம் படித்த மனைவிக்கும் இடையே நடக்கும் சம்பவங்களே இத்திரைப்படத்தின் கதையாம். படவா கோபியும் இத்திரைப்படத்தின் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பரத் நடித்த 555 திரைப்படத்தின் இசையமைப்பாளர் சைமன் இந்த திரைப்படத்திற்கும் இசையமைக்கிறார்...!   
 
 
 
 
 

 

Comments