காதலன் மிரட்டல்: கன்னட நடிகை தற்கொலை முயற்சி!!!

5th of March 2014
சென்னை::காதலன் மிரட்டியதால் கன்னட நடிகை விந்தியா, நீரிழிவு நோய்க்கான மாத்திரைகளை சாப்பிட்டு, தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
பெங்களூரு மாகடி ரோடு தாசரஹள்ளியை சேர்ந்த ரங்கசாமி, நாகம்மா தம்பதியின் ஒரே மகள் விந்தியா (22). இவர், கன்னட இயக்குனர் ராஜு நேத்திராவின் ‘மனத மரையள்ளி‘ கன்னட படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் இம்மாத இறுதியில் திரைக்குவர உள்ளது. ‘மனத மரையள்ளி‘ படத்தில் நடித்தபோது மாரத்த ஹள்ளியை சேர்ந்த மஞ்சுநாத் என்பவருடன் விந்தியாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்துள்ளனர். சமீபத்தில் சினிமா குழுவினர் சிம்லாவுக்கு சுற்றுலா சென்றபோது, விந்தியாவுடன் மஞ்சுநாத்தும் சென்றிருந்தார். இதன் பின்னர் அவர்கள் இருவருக்கும் இடையே கடந்த 3 நாட்களுக்கு முன்பு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் விந்தியாவை சந்தித்த மஞ்சுநாத், தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி மிரட்டியும் உள்ளார்.

தனால் மனமுடைந்த விந்தியா, நேற்று காலை, வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், நீரிழிவு நோய்க்கான 80 மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் அவர் மயங்கி விழுந்தார். விந்தியா தற்கொலை முயற்சி சம்பவம் குறித்து காமாட்சிபாளையா போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலனுடன் ஏற்பட்ட பிரச்சினையில் நடிகை ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
tamil matrimony_HOME_468x60.gif

Comments