பிருத்விராஜ் ஒரு ஜென்டில்மேன் திருடன்!!!!

30th of March 2014
சென்னை::ஒரே நாளில் நடைபெறும் சம்பவங்களை மையமாக வைத்து விறுவிறுப்பாக படம் இயக்குவது கேரளாவில் ஒரு ஃபேஷனாகவே ஆகிவிட்டது. அந்தவகையில் கடந்த வருடம் வெளியான படங்களில் அனைவரின் கவனத்தை ஈர்த்த படம் தான் ‘நார்த் 24 காதம்’. இந்தப்படத்தை இயக்கிய அனில் ராதாகிருஷ்ண மேனனுக்கு பாராட்டுக்கள் குவிந்தன.
 
தற்போது தனது அடுத்த படத்தை ஆரம்பிக்க இருக்கிறார் அனில். படத்தின் பெயர் ‘சப்தமாஸ்ரீ தஸ்கரா’. அதாவது ‘செவன் ஜென்டில்மேன் தீவ்ஸ்’ என்பதன் சமஸ்கிருத வார்த்தை தான் இது. இந்தப்படத்தில் பிருத்விராஜும் ஒரு ஜென்டில்மேன் திருடனாக நடிக்க இருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன. இன்னும் உறுதி செய்யப்படவில்லை என இந்த செய்தியை அனில் ஒருபக்கம் மறுத்தாலும் ரசிகர்கள் என்னவோ ஆவலுடன் தான் இருக்கிறார்கள்.::.

Comments