சமீராவுக்கு மீண்டும் நடிப்பு ஆசை!!!

13th of March 2014
சென்னை::
திருமணம் ஆன 3 மாதத்திலே மீண்டும் நடிப்பை தொடர முடிவு செய்திருக்கிறார் சமீரா ரெட்டி.‘வாரணம் ஆயிரம், ‘வெடி, ‘வேட்டை உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் சமீரா ரெட்டி. இவருக்கும் மோட்டார் பைக் தயாரிக்கும் தொழில் அதிபர் அக்ஷய் வர்தேவுக்கும் கடந்த 3 மாதத்துக்கு முன் காதல் திருமணம் நடந்தது. சினிமாவிலிருந்து ஒதுங்கி இருந்து, குடும்பத்தை கவனித்துக்கொள்வேன் என சொல்லியிருந்தார் சமீரா. ஆனால் அவருக்கு மீண்டும் நடிக்க ஆசை வந்துவிட்டது.
 
இது பற்றி அவர் கூறும்போது, ‘திருமணம் என்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. நிறைய மாற்றங்களையும் ஏற்படுத்தி இருக்கிறது. அவருடன் எனது வாழ்க்கையை மகிழ்ச்சியோடு கழித்து வருகிறேன். நான் சமைக்கும் சாப்பாட்டை விரும்பி சாப்பிடுகிறார். திருமணம் முடிந்த கையோடு நடிப்புக்கும் முழுக்கு போடவே எண்ணி இருந்தேன். ஆனால் மீண்டும் நடிக்கும் ஆசை துளிர்விட்டிருக்கிறது.
 
மாதுரி தீட்சித், கரீனா கபூர் போன்றவர்கள் திருமணத்துக்கு பிறகும் நடிப்பில் கவனம் செலுத்தி வருகின்றனர். அதேபோல் நானும் நடிக்க முடிவு செய்திருக்கிறேன். அதற்கான நல்ல வாய்ப்பு எப்போது வரும் என்று காத்திருக்கிறேன் என்றார்.::...   

Comments