விஜய். சமந்தா பட ஷூட்டிங்கால் டிராபிக் ஜாம் ஏற்பட்டதால் ஐதராபாத்தில்:விஜய் பட ஷூட்டிங்கிற்கு எதிர்ப்பு!!!!
28th of March 2014
சென்னை::.விஜய். சமந்தா பட ஷூட்டிங்கால் டிராபிக் ஜாம் ஏற்பட்டதால் ஐதராபாத்தில் போலீசாரிடம் பிரச்னையில் ஈடுபட்டனர் வாகன ஓட்டிகள். இதனால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.‘துப்பாக்கி‘ படத்தையடுத்து விஜய் நடிக்கும் படத்தை மீண்டும் இயக்குகிறார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்துக்கு ‘கத்தி‘ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன் ஷூட்டிங் தற்போது ஐதராபாத்தில் நடந்து வருகிறது.

வாகன போக்குவரத்து நிறைந்த சந்திரயான்குட்டா பகுதியில் உள்ள மேம்பாலத்தில் நேற்றுமுன் தினம் காலை 10 மணி அளவில் போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு துறை போலீசார் குவிந்தனர். சில நிமிடங்களில் மேம்பாலத்தின் வழியை அடைத்துவிட்டு வாகனங்களை வேறு பாதைக்கு திருப்பி விட்டனர். இதனால் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. 11 மணி அளவில் விஜய், முருகதாஸ், சமந்தா மற்றும் பட குழுவினர் மேம்பாலத்துக்கு வந்தனர். அங்கு விஜய், சமந்தா நடித்த பாடல் காட்சி படமாக்க தொடங்கினார்கள். மேம்பாலபோக்குவரத்து தடைபட்டதால் அப்பகுதியில் மணிக்கணக்கில் டிராபிக் ஜாம் ஏற்பட்டது. இதனால் எரிச்சல் அடைந்த வாகன ஓட்டிகள் பிரச்னையில் ஈடுபட்டனர்.
அங்கிருந்த போலீசாரிடம் நெரிசல் மிகுந்த பகுதியில் ஷூட்டிங் நடத்த அனுமதிகொடுத்தது எப்படி? என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இதுபற்றி அவர்கள் கூறும்போது,‘இப்பகுதியில் மேம்பாலம் கட்டும்போது கடும் நெரிசல் ஏற்பட்டது. மேம்பாலம் வருகிறதே என்பதற்காக பொறுத்துக்கொண்டோம். மேம்பாலம் வந்தபிறகு போக்குவரத்து எளிதானது. தற்போது மேம்பாலத்தில் ஷூட்டிங் நடத்துவதால் கடுமையான டிராபிக் ஜாம் ஏற்பட்டிருக்கிறது. இந்த இடத்தில் பட்டப் பகலில் ஷூட்டிங் நடத்த போலீசார் எப்படி அனுமதி கொடுத்தார்கள் என்று தெரியவில்லை‘ என சத்தம்போட்டனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Comments
Post a Comment