பணம் வாங்காமல் ஓட்டு போடுங்கள்” – கமல் வேண்டுகோள்!!!

20th of March 2014
சென்னை::நடிகர்களை பொறுத்தவரையில் ஒரு தனிமனிதனின் சமூக கடமை பற்றிய உணர்வை தனது ஓவ்வொரு செயலிலும் வெளிப்படுத்துபவர் கமல். அந்தவகையில் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து தேர்தல் கமிஷன் தயாரித்துள்ள விழிப்புணர்வு விளக்க படத்தில் தோன்றி பொதுமக்களுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார் கமல்.

ஒவ்வொரு குடிமகனும் தவறாமல் ஓட்டுப்போடும் கடமையை செய்யவேண்டும். ஓட்டுப்போட யார் அதிக பணம் தருகிறார்கள் என்று பார்க்காமல் உங்கள் பகுதியில் நிற்கும் வேட்பாளர்களின் பண்புகளையும் திறமையையும் கவனித்து நல்லது செய்பவர் யார் என்பதை சீர்தூக்கி ஓட்டுப்போடுங்கள். தயவுசெய்து ஓட்டுக்கு பணம் வாங்கி உங்கள் எதிர்காலத்தையும் சுய மரியாதையையும் விலை பேசாதீர்கள்” என அதில் பேசியுள்ளார் கமல்.

Comments