8th of March 2014
சென்னை::தமிழில் ‘கண்ணா’, ‘ஜெகன் மோகினி’ ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்தவர் ராஜா. தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் பிரபலமான இவர் ‘ஆனந்த்’, ‘வெண்ணிலா’, ‘ஆ நலுகுறு’உட்பட கிட்டத்தட்ட முப்பது படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
ராஜாவுக்கும் சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபர் பிரெடெரிக் வின்சென்ட்டின் மகளான அம்ரிதாவுக்கும் மார்ச்-3ஆம் தேதி சென்னையில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. ஏப்ரல்-25 ஆம் தேதி சென்னையில் உள்ள லீலா பேலஸில் திருமணம் நடைபெற உள்ளது.
மணமகளின் தந்தையோ சூப்பர்ஸ்டார் ரஜினியின் நீண்டகால நண்பர். அதனால் திருமணத்திற்கு ரஜினியை அழைப்பதற்காக மணமக்களுடன் ரஜினியின் வீட்டிற்கு சென்று அழைப்பிதழை வழங்கினார் வின்சென்ட். மணமக்களை ஆசிர்வதித்ததோடு திருமணத்திற்கு வந்தும் வாழ்த்துவதாக உறுதியளித்தார் சூப்பர் ஸ்டார்..
மேலும் தன் நண்பரோடு உள்ள பழைய நினைவுகளையும் நட்பையும் பகிர்ந்து கொண்ட ரஜினி, அவரது குடும்பத்தினர் ஒவ்வொருவர் பெயரையும் குறிப்பிட்டு நலம் விசாரித்து, அவர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
அதுதான் சூப்பர் ஸ்டார்…!...
Comments
Post a Comment