அசத்தல் அழகி யார்? அனுஷ்கா-ஹம்சா போட்டி!!!

21st of  March 2014
சென்னை::அனுஷ்காவின் தோற்றத்துக்கு போட்டியாக 6 அடி உயரத்தில் வந்திருக்கும் ஹம்ச நந்தினி அவருடன் ஒரே படத்தில் போட்டியில் குதித்திருக்கிறார்.
அனுஷ்கா 5 அடி 9 அங்குலம் உயரம் கொண்ட அசத்தலான தோற்றம் கொண்டவர். அவருடன் ஜோடியாக நடிக்க தமிழ் மற்றும் டோலிவுட் ஹீரோக்கள் மத்தியில் போட்டி நிலவியது. விஜய், விக்ரம், சூர்யா, ஆர்யா என டாப் ஹீரோக்கள் அவருடன் ஜோடி சேர்ந்தனர். இந்நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கில் ராஜ்மவுலி இயக்கும் ‘பாஹுபலி‘, குணசேகர் இயக்கும் ‘ராணி ருத்ரம்மா தேவி‘ ஆகிய படங்களில் துணிச்சலான ராணி வேடத்தில் நடித்து வருகிறார் அனுஷ்கா. அவரது ஆஜானபாகு தோற்றம் இப்படங்களுக்கு பிளஸ் என்று பட யூனிட்டார் தெரிவித்தனர்.

அனுஷ்காவுக்கு ஈடுகொடுக்கும் வகையில் ‘ராணி ருத்ரம்மா தேவி‘ படத்தில் மந்தாகினி என்ற இளவரசி வேடத்தில் நடிக்க அசத்தல் உடற்கட்டு கொண்ட ஹீரோயினை தேடினார் குணசேகர். சுமார் 100 பேரை அழைத்து தேர்வு நடத்தினார். அவர்களில் ஒருவர்கூட  அனுஷ்காவின் சூப்பர் தோற்றத்துக்கு அருகில் கூட நெருங்க முடியாததால் சோர்வடைந்தார் இயக்குனர். 101வது நபராக தேர்வுக்கு வந்தார் ஹம்ச நந்தினி. 6 அடி உயரத்தில் அறைக்குள் அவர் நுழைந்தவுடனே குணசேகர் முகம் மலர்ந்தது. ‘நீதான் நான் தேடிக்கொண்டிருந்த நடிகை‘ என்று உடனடியாக தேர்வு செய்துவிட்டார்.

இதுபற்றி ஹம்சா கூறும்போது,‘101வது பெண்ணாக ஆடிஷனுக்கு சென்றேன். உடனடியாக என்னை தேர்வு செய்துவிட்டார். என்னை தேர்வு செய்ய என்ன காரணம் என்று அவரிடம் கேட்டேன். தான் உருவாக்கிய கதாபாத்திரத்துக்கு ஏற்ற வசீகரம் என்னிடம் இருந்ததாக கூறினார். உடனடியாக என்னை குதிரை ஏற்ற பயிற்சிக்கு அனுப்பிவைத்தார்‘ அனுஷ்காவைவிட ஹம்ச நந்தினி 1 இன்ச் கூடுதல் உயரம் கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments