நாய்க்கு லிப் டு லிப் முத்தம் தந்த த்ரிஷா!!!!


22nd of March 2014
சென்னை
::செல்லமாக வளர்க்கும் நாய்க்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்து கொஞ்சினார் த்ரிஷா.ஹாலிவுட் படங்களில்  ஹீரோ, ஹீரோயின்கள் லிப் டு லிப் முத்தம் தரும் காட்சிக்காக ரசிகர்கள் மணிக்கணக்கில் காத்திருந்து ரசிப்பார்கள். இப்போது பாலிவுட்டிலும், கோலிவுட்டிலும் சர்வசாத£ரணமாக இடம்பெறுகிறது. தற்போது இந்த வாய்ப்பு செல்ல பிராணிகள் வரை பரவிவிட்டது. த்ரிஷாவுக்கு நாய்கள் என்றால் ரொம்ப பிரியம். தெருவில் அடிபட்டு கிடக்கும் நாய்களை மீட்டு அவற்றை பாதுகாப்பு அமைப்புகளில் ஒப்படைப்பதுடன் தானே வளர்த்தும் வருகிறார்.

 ஹீரோயின் வீட்டு நாய்க்குட்டி என்றால் ராஜமரியாதைதான். ஏ.சி ரூம், ஷாம்பு குளியல், கார் பயணம் என ஜமாய்ப்பதுண்டு. தற்போது த்ரிஷா தான் வளர்க்கும் நாயிடம் ரொம்பவே செல்லம் கொஞ்சுகிறார். காலையில் தினமும் டிரட்மில் (நடைமிஷின்)நடைபயிற்சி செய்யும்போது கூடவே நாய்க்குட்டியையும் அழைத்துச் செல்கிறார். அதற்கும் நடைபயிற்சி அளிக்கிறார். சொன்னபேச்சை வாலை குழைத்துக்கொண்டே செய்யும் நாய்க்குட்டிக்கு அடிக்கடி லிப் டு லிப் முத்தம் கொடுத்து உற்சாகப்படுத்துகிறார். இதை கேள்விபட்ட ரசிகர்கள் கொடுத்தவைத்த நாய்தான் என்று பெருமூச்சு விடுகிறார்களாம்...

Comments