21st of March 2014சென்னை::.சினிமாவில் ஜோடியாக நடித்தவர்கள் நிஜ காதல் ஜோடி ஆகிவிட்டனர். இதற்கு அவர்கள் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.‘கேரள நாட்டிளம் பெண்களுடனே படத்தில் நடித்திருக்கும் ஜோடி அபி சரவணன், காயத்ரி. எஸ்.எஸ்.குமரன் டைரக்ஷன் செய்திருக்கிறார். தந்தையின் விருப்பப்படி கேரளத்து பெண்ணை மணக்கும் லட்சியத்துடன் வாழும் மகனாக அபி நடிக்கிறார். கேரளத்து பெண்ணாக காயத்ரி நடிக்கிறார். கதைப்படி முதல் கட்ட ஷூட்டிங்கிலேயே இவர்களின் காதல் காட்சி திருவனந்தபுரத்தில் படமாக்கப்பட்டது.
அப்போது நிஜத்திலேயே இருவருக்கும் காதல் மலர்ந்தது. படம் முடிந்து திரைக்கு வரவுள்ள நிலையில் இதன் பத்திரிகையாளர் காட்சி நேற்று பிரசாத் ஸ்டுடியோவில் திரையிடப்பட்டது.அப்போது இருவரின் காதல் விவகாரம் லேசாக கசிய ஆரம்பித்தது. காட்சி முடிந்ததும் படம்பற்றி கருத்து கேட்க இயக்குனருடன் ஹீரோ அபி வந்திருந்தார்.
அவரிடம் நிருபர்கள் சூழ்ந்துகொண்டு ‘நீங்களும், காயத்ரியும் நிஜமாகவே காதலிப்பதாக கூறப்படுகிறதே‘ என்று கேட்டபோது நீண்ட நேரம் பதில் கூறாமல் மழுப்பிக்கொண்டிருந்தார். பிறகு மற்ற ஹீரோக்கள் தங்கள் காதலை வெளிப்படையாக பேசுவதுபற்றி அவரிடம் கூறி, மீடியாவினர் குடைச்சல் தர, ‘இருவரும் காதலிப்பது உண்மைதான். ஆனால் இரு குடும்பத்திலும் இதற்கு எதிர்ப்பு இருக்கிறது. அவர்கள் சம்மதத்துடன்தான் எங்கள் காதல் நிறைவேறும் என்றார். அபி மதுரையை சேர்ந்தவர். காயத்ரி கேரளத்தை சேர்ந்த பிளஸ் 2 மாணவி. .
Comments
Post a Comment