4th of March 2014
சென்னை::1990களில் பல கல்லூரி இளசுகளின் தூக்கத்தைக் கெடுக்கும் கனவுக் கண்ணனாக வலம் வந்தவர் நடிகர் அரவிந்த்சாமி. ‘தளபதி’ படத்தின் மூலம் அறிமுகமான அவர், தொடர்ந்து ரோஜா, மறுபடியும், பம்பாய், மின்சாரக் கனவு ஆகிய மாபெரும் வெற்றிப் படங்களில் காதல் நாயகனாக வெற்றிகரமாக வலம் வந்தார்.
திடீரென நடிப்பதை நிறுத்தி விட்ட அரவிந்த்சாமி கடல் படத்தில் மீண்டும் ரீ என்ட்ரியானார். ஆனால் அதற்கப்புறமும் வழக்கம்போலவே சைலன்ட்டாகவே இருந்துவிட்டார். இந்தநிலையில் மலையாளத்தில் பிருத்விராஜுடன் இணைந்து ‘தி செவன்த் டே’ படத்தில் முக்கியமான வேடத்தில் நடித்து வருகிறார் அரவிந்த்சாமி. இந்தப்படம் ஏப்ரல் 11ல் திரைக்கு வர இருக்கிறது.
இந்தப்படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் பிருத்விராஜின் வயது 42 என்பதால் நரைத்த முடியுடன் அதாவது சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் நடிக்கிறார். கிட்டத்த ‘மங்காத்தா’ அஜீத்தின் கெட்டப் மாதிரி. இந்தப்படத்தில் கதாநாயகியாக ஜனனி ஐயர் நடிக்க, முக்கியமான வேடத்தில் நடிக்கிறார் அஜ்மல்.
Comments
Post a Comment