29th of March 2014
சென்னை::சாய் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக தயாராகி வரும் படம் 'ஜாக்கி'. இந்த படத்தில் 'சாட்டை' படத்தில் நடித்த யுவன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக தர்ஷிதா நடிக்கிறார். மற்றும் நான் கடவுள் ராஜேந்திரன், நளினி, ரவிபிரகாஷ், சேரன்ராஜ், கஞ்சாகருப்பு, வாசுவிக்ரம், டான்ஸ்மாஸ்டர் தினா, ரிஷா, ரேகாஸ்ரீ, தளபதி தினேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஸ்ரீகாந்த் தேவா இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை அறிவுமதி, ரவிஷங்கர், அண்ணாமலை ஆகியோர் எழுதுகிறார்கள். ரவி ஒளிப்பதிவு செய்ய சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்கிறார். தினா, பாப்பி, ராதிகா ஆகியோர் நடனம் அமைக்கிறார்கள். சண்டைப்பயிற்சியை தளதி தினேஷ் அமைக்க, பி.ராஜூ கலையை நிர்மாணிக்கிறார். எஸ்.எம்.சேகர் தயாரிப்பு மேற்பார்வையிட, மெளனம் ரவி மக்கள் தொடர்பை கவனிக்கிறார்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி கோவை ரவிராஜா இயக்குகிறார்.
இப்படத்தின் பாடல் காட்சிகள் அனைத்தும் மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ளது. "என் உயிரான ஜீவன் எனை நானே தேடும் நேரம்..." என்ற பாடல் காட்சி சமீபத்தில் படமாக்கப்பட்டது. யுவன் - தர்ஷிதா ஆடிப்பாடும் இப்பாடல் இனிமையான மொலொடிப் பாடலாக அமைந்துள்ளது. மேலும் மூன்று பாடல்களை மொத்தம் 10 நாட்களில் படமாக்கியுள்ளனர்.
முழுக்க முழுக்க காதல் படமாக உருவாகும் இப்படம் விரைவில் வெளியாக உள்ளது. ....

Comments
Post a Comment