ரஜினி புதிய பட ஷூட்டிங் மே மாதம்!!!!

25th of March 2014
சென்னை::ரஜினி நடிக்கும் புதிய படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் இறுதி அல்லது மே மாதம் முதல் தொடங்க உள்ளது. ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடித்துள்ள ‘கோச்சடையான்‘ படத்தை வரும் ஏப்ரல் 11ம் தேதி ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தேர்தலுக்கு பிறகு படம் ரிலீஸ் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

அடுத்து ரஜினி நடிக்கும் புதிய படத்தை கே.எஸ்.ரவிகுமார் டைரக்ஷன் செய்கிறார். ஏற்கனவே ‘ஜக்குபாய்‘, ‘ராணா‘ என 2 படங்களை ரஜினி நடிப்பில் ரவிகுமார் இயக்குவதாக இருந்தது. பின்னர் 2 படங்களுமே கைவிடப்பட்டது. ஆனாலும் ‘கோச்சடையான்‘ படத்தின் கதையை ரவிகுமார் எழுதி இருக்கிறார்.  ‘படையப்பா‘ பாணியில் சவால் நிறைந்த படமொன்றை ரவிகுமார் தர வேண்டும் என்று ரஜினி ரசிகர்கள் அவரிடம் கேட்டு வந்தனர். அதற்கான தருணம் இப்போது வந்திருக்கிறது. இதில் ரஜினி ஜோடியாக அனுஷ்கா நடிக்க உள்ளார். அவரிடம் ரவிகுமார் கால்ஷீட் கேட்டிருக்கிறார். அவரும் ரஜினியுடன் ஜோடி சேர கிரீன் சிக்னல் கொடுத்திருக்கிறார்.

தற்போது ‘ராணி ருத்ரம்மா தேவி‘, ‘மஹாபலி‘ என சரித்திர பின்னணியிலான 2 படங்களில் அவர் நடித்துவரும் படங்கள் முடிவடையும் தருவாயில் உள்ளது. எனவே ஏப்ரல் இறுதியில் அவர் கால்ஷீட் ஒதுக்கி தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ரஜினி படத்துக்கு மாஸ் டைட்டில் வைப்பது பற்றி அவருடன் ரவிகுமார் ஆலோசித்து வருகிறார்.

Comments