21st of March 2014
சென்னை::கேரளத்து பெண்குட்டியான அசின், ஜெயம்ரவி நடித்த எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் தமிழுக்கு வந்தவர், குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோக்களுடன் ஒரு ரவுண்டு வந்தவர், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கஜினி படம் மூலம் இந்திக்கு சென்று அங்கேயும் முன்னணி நடிகையாகி விட்டார்.

அங்குள்ள
பிரபல ஹீரோக்களே அசினுக்கு பிரத்யேக சிபாரிசு செய்து வந்ததால், இப்போது
வரை நீடித்துக்கொண்டிருக்கிறார். அவ்வப்போது மார்க்கெட் சரிந்தபோதும்,
யாராவது நடிகர்கள் புகுந்து அசினுக்கு கைகொடுத்ததால் இப்போதும் தாக்கு
பிடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கிடையே தமிழ், தெலுங்கு, இநதியில் தான்
இயக்கும் படத்தின் நாயகியாகவும் அசினை புக் பண்ணியிருக்கிறார் மணிரத்னம்.
இப்படி
பரவலாக நடித்துக்கொண்டிருக்கும் அசின், சினிமாவில் தான் சம்பாதிக்கிற
பணத்தின் ஒரு கணிசமான தொகையை சமூக சேவையில் செலவிட்டு வருகிறார்.
குறிப்பாக, அனாதை பிள்ளைகளை அவர் படிக்க வைத்து வருகிறார். அவர்களது
படிப்பு முடிகிற வரை மொத்த செலவையும் தானே ஏற்று வருகிறார். அதனால்
அசினின் இந்த சமூக சேவையை உற்சாகப்படுத்தும் விதமாக சமீபத்தில் கேரளா அரசு,
அசினை கெளரவித்துள்ளது. இதையடுத்து, இன்னும் நிறைய சமூக சேவையை செய்ய
தூண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அசின்..
Comments
Post a Comment