12th of March 2014
சென்னை::ரஜினியின் சினிமா வரலாற்றில் முதன்முறையாக 100 கோடிக்கு மேல் உருவாகியுள்ள
படம் கோச்சடையான். அதுவும் இந்திய அளவில் முதன்முறையாக மோஷன் கேப்சர்
3டி தொழில் நுட்பத்தில் இப்படம் தயாராகியுள்ளது. அந்த வகையில் இந்த
டெக்னாலஜியில் நடித்த முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார்
ரஜினி.
ஏப்ரல் 11-ந்தேதி திரைக்கு வரும் இப்படத்தை தமிழ், தெலுங்கு. இந்தி, போஜ்புரி, பஞ்சாபி, மராட்டி என 6 மொழிகளில் தயாரித்துள்ளனர். மேலும், ஜப்பானில் ரஜினி படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வருவதால் ஜப்பான் மொழியிலும் டப்பாகும் கோச்சடையான், பிரெஞ்ச், ஜெர்மன், ஸ்பானிஷ் ஆகிய மொழிகளிலும் அடுத்து டப்பாக உள்ளதாம்.
இந்நிலையில், மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் இந்தியாவில் தயாரான முதல் படம் என்பதால் இப்படத்தை கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடவும் திட்டமிட்டுள்ளார்களாம். ஆக, மிக விரைவில் கோச்சடையான் உலக அரங்கில் பேசப்படும் தகுதியை பெறப்போகிறது..

Comments
Post a Comment