மீண்டும் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி!!!

4th of March 2014
சென்னை::கோச்சடையான் படம் ரிலீசுக்குத் ரெடியாகி விட்டது. அதை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினி அடுத்த படத்தில் நடிப்பதற்கு தயாராகி விட்டார்.  இந்நிலையில் சூப்பர் ஸ்டாரின் அடுத்த படத்தை இயக்குவது யார் என்பது விடை தெரியாமலே இருந்து வந்தது.
முதலில் டைரக்டர் ஷங்கரின் இயக்கத்தில் நடிப்பதாக செய்திகள் வந்தன.  இதற்கான கதை டிஸ்கஸ்னில் இருவரும் சந்தித்து பேசிக் கொண்டதாகவும் தகவல் வெளியாகின.  தாங்கள் கதை விவாதத்தில் ஈடுபட்டததை இயக்குநர் ஷங்கரும் ஒப்புக் கொண்டார்.
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை பிரபல கன்னடத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  டைரக்டர் கே எஸ் ரவிக்குமாருக்கு இந்தப் படத்தை இயக்கும் வாய்ப்பை வழங்க ரஜினி முடிவெடுத்திருப்பதாகவும் செய்திகள் வெளி வந்தவண்ணம் உள்ளது.
படையப்பா படம் தான் ரஜினியும், இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாரும் இணைந்த கடைசி படமாகும். அதனை தொடர்ந்து இருவரும்  ஜக்குபாய், ராணா படங்களில்  இணைவதாக இருந்தது. ஆனால் பின்னர் அந்த இரு படங்களுமே நின்றுபோயின.
கோச்சடையானுக்குப் பிறகு, அடுத்த படத்துக்கான அறிவிப்பை வெளியிடத் தயாராகி வருகிறார் ரஜினி.
தான் நடிக்கும் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை அவர் கே எஸ் ரவிக்குமாருக்கே வழங்க இருக்கிறாராம். ராக்லைன் வெங்கடேஷ் இந்தப் படத்தை பிரபல கன்னட படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கிறார். இவர் ஏற்கெனவே தமிழில் தம், மஜா போன்ற படங்களைத் தயாரித்துள்ளார்.    
tamil matrimony_HOME_468x60.gif

Comments