2nd of March 2014
சென்னை::சிம்புவின் காதல்களும் காதல் தோல்விகளும் என புத்தகமே போடும் அளவுக்குப்
போய்விட்டது அவரது தனிப்பட்ட வாழ்க்கை. சாதாரண ஒருவரின் தனிப்பட்ட
வாழ்க்கையை யாரும் எட்டிப்பார்ப்பதில்லை.
சிம்புவுடனான காதல் முறிந்துவிட்டது என்று ஹன்சிகா அறிவித்தையடுத்து
சிம்புவும் தனது காத்ல் முறிந்து விட்டது என்றும் ஹன்சிகாவுடன் நட்பு
தொடரும் என்றும இருவரும் இணைந்து நடிப்போம் என்றும கூறியுள்ளார் .
மேலும் ஹன்சிகாவுடன் காதல் இல்லை என சிம்பு அறிவித்ததையடத்து இதற்கான
காரணங்கள் குறித்து பல்வேறு கட்டுக்கதைகள் எழுந்தன. காதல் முறிந்ததற்கு
ஹன்சிகாவின் அம்மாதான் என்று சிம்பு தரப்பில் கூறப்படுகிறது. ஹன்சிகாவை
அவர் மிரட்ட ஆரம்பித்ததால், சிம்புவும் ஹன்சிகாவும் பேசி வைத்து இந்த காதல்
முறிவை அறிவித்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தங்கள் காதல் முறிவு குறித்து சிம்பு கூறுகையில்,
ஹன்சிகாவின் நலன் கருதி நான்தான் இந்த முடிவை எடுத்தேன். ஆனால்
இருவருக்குமிடையில் நட்பு தொடரும், எங்களின் இந்த அறிவிப்பு எங்கள் தொழிலை
பாதிக்காது. இருவரும் சேர்ந்து நடிக்க எந்தத் தடையும் இல்லை.இப்போதும்கூட
வாலு படப்பிடிப்பில் இருவரும் கலந்து கொண்டிருக்கிறோம். சேர்ந்து
நடிக்கிறோம். என்னால் ஹன்சிகாவுக்கு எந்த பாதிப்பும் வரக்கூடாது என்றார்.
Comments
Post a Comment