வடகறி படத்திலிருந்து விலகினார் யுவன் சங்கர் ராஜா!

25th of March 2014
சென்னை::ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கிணங்க விறுவிறுப்பான கட்டத்தில் தயாராகி வரும் படம் வடகறி.

சுப்பிரமணியபுரம் படத்தில் இணைந்து நடித்த ஜெய்-சுவாதி ஜோடி மீண்டும் இப்படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். மீகா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் தயாநிதி அழகிரி தயாரிக்கும் இந்தப்படத்தை சரவணராஜன் இயக்குகிறார். இப்படத்திற்கு இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தவர் யுவன் ஷங்கர் ராஜா.

இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா பிஸியான ஷெட்யூல் காரணமாக வடகறி படத்திலிருந்து விலகிவிட்டதாக அப்பட தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அவருக்குப் பதில் அனிருத்திடம் சவுண்ட் எஞ்ஜினியர்களாகப் பணியாற்றிய இரட்டையர்களான விவேக் - மெர்வின் இசையமைப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், ‘வடகறி’ படத்திற்காக யுவன் ஏற்கெனவே போட்டுக்கொடுத்த மெலடிப் பாடலை மட்டும் படத்தில் பயன்படுத்த இருக்கிறார்களாம். மீதியுள்ள பாடல்களையும், படத்தின் பின்னணி இசையையும் விவேக் சிவா-மெர்வின் சாலமன் இருவரும் இணைந்து கவனிக்க உள்ளனர் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக உத்தம வில்லன் படத்திலும் முதலில் யுவன் சங்கர் ராஜாத தான் பணியாற்ற இருந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவருக்குப் பதில் ஜிப்ரான் ஒப்பந்தமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments