23rd of March 2014
சென்னை::கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா, பார்வதிமேனன், கே.பாலசந்தார் ஆகியோர் நடிப்பில் உத்தம வில்லன் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக தற்போது நடந்து வருகிறது. இந்த படத்தில் கமல்ஹாசன் 8ஆம் நூற்றாண்டு கூத்து கலைஞராகவும், 21ஆம் நூற்றாண்டு சூப்பர் ஸ்டாராகவும் நடிக்கிறார்.
இந்த படத்தில் ஒரு காட்சியில் சூப்பர் ஸ்டாராக நடிக்கும் கமல், தனது சக நடிகரும், மற்றொரு சூப்பர் ஸ்டாராக விளங்கும் ஒரு நடிகருடன் ஆலோசனை கேட்பது போன்ற ஒரு காட்சி வருகிறது. வீடியோ கான்பிரன்ஸில் பேசிக்கொள்வதாக வரும் இந்த காட்சியில் நடிக்க ரஜினிகாந்த்திடம் கமல்ஹாசன் பேசி வருவதாக கூறப்படுகிறது. நினைத்தாலே இனிக்கும் படத்திற்கு பின்னர் இருவரும் சேர்ந்து இதுவரை நடிக்கவில்லை. பல படங்களில் இருவரையும் இணைக்க நடந்த முயற்சிகள் யாவும் தோல்வியில் முடிந்தன.
தற்போது கமல்ஹாசன் உத்தம வில்லனில் தமது நீண்ட நாள் நண்பருடன் சேர்ந்து நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஒருவேளை ரஜினிகாந்த் இந்த வேடத்தில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என்றால் இந்த வேடத்தில் ஷாருக்கானை நடிக்க வைக்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். !!.
Comments
Post a Comment