சிம்புவுக்கு ஜோடியாகிறார் த்ரிஷா!!!

7th of March 2014..
சென்னை::செல்வராகவன் அடுத்து இயக்கவிருக்கும் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் சிம்பு.
இரண்டாம் உலகம்' தோல்விக்குப் பிறகு, குறுகிய கால தயாரிப்பில் படத்தினை இயக்கவிருக்கிறார் செல்வராகவன். அதுவும் தனது ஆரம்பகால படங்களான ’காதல் கொண்டேன்’, ‘7 ஜி ரெயின்போ காலனி’ படங்களின் வரிசையில் காதலை மையமாக வைத்து இப்படத்தை இயக்க இருக்கிறார்.
இந்தப் படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். இவர், ஏற்கெனவே சிம்புவுடன் ‘அலை’, ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படங்களில் ஜோடி சேர்ந்து நடித்திருக்கிறார். இருவரும் மூன்றாவது முறையாக இணையும் படம் இது.
செல்வராகவனின் முந்தைய படங்களுக்கு இசையமைத்த யுவன் சங்கர் ராஜாதான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறாராம். இதன் மூலம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பழைய கூட்டணி மீண்டும் கைகோர்க்கிறது.

செல்வராகவன்– சிம்பு முதன் முதலாக இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது. இப்படத்தினை ரேடியன்ஸ் மீடியா நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது.  தற்போதே இப்படத்திற்கு ஏகத்திற்கு எதிர்பார்ப்பு எகிறி கிடக்கிறது..

Comments