நடிகை ரதி மகனுடன் கமல் மகள் காதல்?!!!

31st of March 2014
சென்னை:நடிகர் கமல்ஹாசனின் இளையமகள் அக்‌ஷரா தாய்  சரிகாவுடன் மும்பையில் வசிக்கிறார். இவர் தற்போது இந்தியில் தனுஷுடன் நடித்து வருகிறார். இந்நிலையில் கமல் மகள் அக்‌ஷராவுக்கும் பழைய நடிகை ரதியின் மகன் தனுஜ்வில்வானிக்கும் காதல் மலர்ந்துள்ளதாக மும்பையில் செய்தி பரவி உள்ளது.
ரதியின் மகன் தனுஜ் இந்திப் படங்களில் நடித்து வருகிறார். அக்ஷரா தனுஜ் இடையே நட்பு ஏற்பட்டு காதலாக மலர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இருவரும் அடிக்கடி  சந்தித்து காதலை வளர்ப்பதாகவும் கிசுகிசுக்கின்றனர். இவர்கள் காதல் விவகாரம் தெரிந்து சரிகா அதிர்ச்சியாகி உள்ளார். சினிமாவில் முழு கவனமும் செலுத்தும் படியும் காதலில் நேரத்தை வீணாக்க வேண்டாம் என்றும்  மகளுக்கு அறிவுரை கூறி வருகிறார் சரிகா.
நடிகை ரதி 1970 மற்றும் 80 களில் ரதி தமிழ் படங்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். புதிய வார்ப்புகள், நிறம் மாறாத பூக்கள், உல்லாச பறவைகள், முரட்டுக்காளை, கழுகு உள்பட பல படங்கில் நடித்தவர். இவர் கமலஹாசனுடன் இவர் நடித்த ஏக் துஜே ஹேலியா இந்தியில் பெரும் வரவேற்பை பெற்றது எனபது குறிப்பிடத்தக்கது...

Comments