31st of March 2014
சென்னை::2012 ஆம் வருடம் வெளியான துப்பாக்கி திரைப்படம்
பெரும் வெற்றியை பெற்றது. படத்தில் விஜய்யை வித்தியாசமான கோணத்தில் காட்டி
இருந்தார் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ்.
இப்போது மீண்டும் அதே கூட்டணியே கத்தி படத்தில் கைகோர்த்திருக்கிறது.
இப்படத்தில் விஜய் இரு மாறுபட்ட வேடத்தில் நடிக்கிறார். சமந்தா கதாநாயகியாக
நடிக்கிறார். படத்திற்கு இசை அனிருத். இந்த வெற்றிக் கூட்டணியில் புதிதாக
அனிருத் இணைந்திருப்பதால் படத்தின் இசை மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு
ஏற்பட்டுள்ளது. அந்த எதிர்ப்பை அனிருத் பூர்த்தி செய்வாரா என்பதுதான்
இப்போதைக்கு விஜய் ரசிகர்களின் கேள்வி.
கத்தி படத்தில் மொத்தம் 5 பாடல்கள் மற்றும் ஒரு தீம் மியூசிக்காம். இவை அனைத்தையும் கம்போஸ் செய்து கொடுத்துவிட்டாராம் அனிருத்.
வழக்கம்போல் இதிலும் விஜய் பாடும் பாடல் ஒன்று இடம்பெறுகிறதாம். படத்தில் விஜய்யின் அறிமுகப் பாடலை அனிருத்தும், ஆதியும் இணைந்து பாடியிருக்கிறார்களாம். இப்பாடல் இந்த வருடம் சூப்பர் ஹிட் வரிசையில் இடபெறும் என்று படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஏற்கெனவே இரண்டு பாடல்களுக்கான படப்பிடிப்பை சென்னை ஏர்போர்ட்டிலும், ஐதராபாத்திலும் படமாக்கிவிட்டார்களாம்.
மீதமுள்ள பாடல்களை அடுத்தடுத்து படமாக்க இருக்கின்றனர். அதேசமயம் பாடல்களுக்கு இசையமைக்க அனிருத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கிறதாம். பொதுவாக விஜய் படம் என்றால் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட்தான். அந்த வரிசையில் கத்தி திரைப்படமும் சேருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்...

Comments
Post a Comment