கமல் ஜோடியாக நடிக்க வருகிறார் கவுதமி!!!

 7th of March 2014..
சென்னை::சினிமாவில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த கவுதமி கமல் மனைவியாக நடிக்க உள்ளார்.குரு சிஷ்யன், தேவர் மகன், ருத்ரா என பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் கவுதமி. கடந்த சில வருடங்களாக கேன்சர் நோய் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பிறகு மீண்டு வந்தார். நீண்ட நாள் வெளியில் தலைகாட்டாமல் இருந்தவர் பின்னர் வழக்கம்போல் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தொடங்கினார். கமலின் படங்களுக்கு காஸ்டியூம் டிசைனராகவும் பணியாற்றினார். தற்போது மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளார். 
 
மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘த்ரிஷ்யம்‘ என்ற படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் கமல் நடிக்கிறார். மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக நடித்த மீனாவே கமலுக்கு ஜோடியாக நடிப்பார் என்று கூறப்பட்டது. ஆனால் அது உறுதியாகவில்லை. இதையடுத்து கவுதமி ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது...

Comments