காமெடி நடிகர் பாலாஜி மரணம்!!!

7th of March 2014..
சென்னை::
மஞ்சள் காமாலை நோயினால் அவதிப்பட்டு வந்த காமெடி நடிகர் பாலாஜி, மரணம் அடைந்தார். அவருக்கு வயது 43. சின்னத்திரையில் காமெடி நடிகராக வலம் வந்தவர் நடிகர் பாலாஜி.
 
தனியார் டி.வி. ஒன்றில் சூப்பர்-10 நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். அதன்பிறகு வெள்ளித்திரைக்கு வந்த பாலாஜி, சிலம்பாட்டம், திண்டுக்கல் சாரதி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
 
தில்லு முல்லு படத்தின் காமெடி வசனங்களையும் இவர் எழுதியுள்ளார். சென்னை, தாம்பரத்தில் வசித்து வந்த பாலாஜி, கடந்த பல நாட்களாக மஞ்சள் காமாலை நோயினால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், நோயின் தாக்கம் அதிகமாக கடந்த இருதினங்களாக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் சிகிச்சை பலன் இன்றி இன்று(மார்ச் 7ம் தேதி) காலை 8 மணியளவில் மரணம் அடைந்தார்.

மறைந்த பாலாஜியின் உடல் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு ஒரு மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர். பாலாஜியின் இறுதிசடங்கு நாளை(மார்ச் 8ம் தேதி) நடைபெறுகிறது....

Comments