30th of March 2014
சென்னை::கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் படம் விரைவில்
தொடங்கயிருக்கிறது. ஆனால், அப்படத்திற்கான வேலைகள் தொடங்கப்பட்டதில்
இருந்தே சில முன்னணி நடிகைகளிடம் கால்சீட் கேட்டு வந்தார் கெளதம். ஆனால்
அவர் எதிர்பார்த்த நடிகைகளை விட, எதிர்பார்க்காத த்ரிஷா உள்ளிட்ட சில
நடிகைகளே கால்சீட் கொடுக்க நான் நீ என்று முட்டி
மோதிக்கொண்டிருந்தார்கள்.
இதனால், த்ரிஷா தனது
விண்ணைத்தாண்டி வருவாயா ஹிட் படத்தில் நடித்தவர் என்பதால் செண்டிமென்ட்
கருதி அவரை இரண்டில் ஒரு கதாநாயகியாக்க நினைத்தார். ஆனால், அஜீத்துடன் அவர்
நடித்த ஜீ, கிரீடம் என இரண்டு படங்கள் தோல்வியடைந்த செண்டிமென்டும்
இருப்பதால், இந்தமுறை ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று த்ரிஷாவை தள்ளி
வைத்துவிட்டார்.
அதற்கடுத்துதான், அஜீத்துடன்
இதுவரை ஜோடி சேராத நடிகைகளாக பட்டியலிட்ட கெளதம்மேனன், அனுஷ்காவிடம்
பேசினார். அஜீத் படம் என்பதால் தெலுங்கில் பிசியாக நடித்து வந்தபோதும்,
எப்படியாவது கால்சீட் தந்து விடுகிறேன் என்று நம்பிக்கை வாக்குறுதி
அளித்தார். அதனால், ஒரு கதாநாயகி ஓ.கே, அடுத்து இன்னொரு நாயகியாக யாரை
கமிட் பண்ணலாம் என்று பாலிவுட் பக்கம் அலைந்து திரிந்து கொண்டிருந்தார்
கெளதம்.
ஆனால், இப்போது அஜீத் தரப்பே முன்வந்து,
எதற்கு பாலிவுட் நடிகை, அதான் ஐ படத்தில் நடித்துள்ள ஹாலிவுட் நடிகை
எமிஜாக்சன் இருக்கிறாரே என்று கெளதமுக்கு எடுத்துக்கொடுத்துள்ளனர்.
அதனால், என்ன சம்பளம் கேட்டாலும் கொடுத்து எமியை புக் பண்ணி விடுவது என்று
அவருக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் கெளதம்மேனன். ஆக, தாண்டவம் படத்தில்
விக்ரமுடன் இணைந்து நடித்த அனுஷ்கா-எமி ஜாக்சன் ஆகிய இருவரும் மீண்டும்
அஜீத்துடன் இணைகின்றனர்.
Comments
Post a Comment