போட்டி இருந்தாலும் தனுசும் நானும் நல்ல நண்பர்கள்: சிம்பு!!!

3rd of March 2014
சென்னை::தனுசும், சிம்பும் 2000–ம் ஆண்டில் ஒன்றாகவே திரையுலகில் அறிமுகமானார்கள். அப்போது இருவருக்கும் கடும் மோதல் இருந்தது. பின்னர் அது படங்களில் இருவரும் ஒருவரை தாக்கி ஒருவர் வசனம் வைக்கும் அளவுக்கு வலுவடைந்தது.

இருவரின் ரசிகர்களும் மோதிக் கொண்டார்கள். பேஸ்புக், டுவிட்டரிலும் ரசிகர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கருத்துக்கள் பதிவு செய்தனர். இந்த மோதல் போக்கு கடந்த சில வருடங்களாக கொஞ்சம் கொஞ்சமாய் தணிந்தது. பொது விழாக்களில் இருவரும் சிரித்தனர். கை குலுக்கினர். தற்போது நெருங்கிய நண்பர்களாகவும் மாறி இருக்கிறார்கள்.

முன்பெல்லாம் விழாக்களில் ஒரே மேடையில் பங்கேற்பதை தவிர்த்தனர். இப்போது ஒன்றாக மேடை ஏறுகிறார்கள். சேர்ந்து வெளிநாடுகளுக்கும் சென்று வருகின்றனர். விருந்து நிகழ்ச்சிகளிலும் ஒன்றாக பங்கேற்கிறார்கள்.

வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘காக்கா முட்டை’ படத்தில் சிம்பு ஒரு காட்சியில் மட்டும் கவுரவ தோற்றத்தில் தோன்றுகிறார். இந்த நிலையில் தனுசுடன் சேர்ந்து இருக்கும் படத்தை சிம்பு தனது டுவிட்டரில் வெளியிட்டு உள்ளார். அதில் சிறந்த போட்டியாளர்களால்தான் நல்ல நண்பர்களாக இருக்க முடியும். நாங்கள் அப்படித்தான் என்று குறிப்பிட்டு உள்ளார்.
tamil matrimony_HOME_468x60.gif

Comments